மகப்பேற்று சிறுவர் சுகாதாரத்தை, சுகாதாரப் பராமரிப்பு முறைமையின் முக்கியமான ஒரு அங்கமாகத் தாபித்து, அடிப்படை சுகாதார பராமரிப்பு வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். 1926 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பிரிவு முறைமையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, மகப்பேற்று சிறுவர் சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சியின் பெறுபேறாக சுகாதார மருத்துவப் பொறுப்பதிகாரி ஒருவரைக் கொண்டு களுத்துறையில் முதலாவது சுகாதாரப் பிரிவு தாபிக்கப்பட்டது.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை, அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு ஒரு தேசிய கொள்கையாக அங்கீகரித்தது. இந்தக் கொள்கை, சுகாதார அமைச்சினால் ஏற்கனவே நிர்மாணித்து வழங்கப்படும் மகப்பேற்று சிறுவர் சுகாதாரச் சேவைகளுடன் ஒன்றிணைக்கப்பட்டது.

இதன் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொருட்டு, இது சுகாதார அமைச்சினுள் 1968 ஆம் ஆண்டு தனியான ஒரு பிரிவு தாபிக்கப்பட்டது. இது ஆரம்பத்தில், மகப்பேற்று சிறுவர் சுகாதாரப் பணியகம் என அழைக்கப்பட்டது. அதன் பின்னர், மகப்பேற்று சிறுவர் சுகாதார விடயத்திற்கு உதவிப் பணிப்பாளர் ஒருவரை நியமித்து குடும்பச் சுகாதாரப் பணியகம் என மீளபெயர் குறிக்கப்பட்டு அழைக்கப்பட்டது. இந்த உதவிப் பணிப்பாளர் பதவி 1986 ஆம் ஆண்டில் மகப்பேற்று சிறுவர் சுகாதார விடயத்திற்கான பணிப்பாளர் எனத் தரமுயர்த்தப்பட்டது.

இதற்கு முதல் முதலில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் (1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 1970 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரை) டாக்டர் டெரென்ஸ் பெரேரா ஆவார். இவரைத் தொடர்ந்து இந்தப் பணியகத்தின் இன்றைய வளமிகு வளர்ச்சி நிலைக்கு பின்வரும் நபர்கள் பங்களித்திருந்தனர்.

Terance 1996

டாக்டர். டெரன்ள் பெரேரா
(தை 1968- மார்கழி 1970)

டாக்டர். எஸ்.வை.எஸ்.பீ. ஹேர்ட்
(மே 1971 - பெப்ரவரி 1979)

டாக்டர். ஆர்.ஏ.எஸ். ரெபெல்
(மார்ச் 1979 - ஜுலை 1981)


 
டாக்டர். என்.டபிள்யு. விந்யசாகர
(ஆகஸ்ட் 1981 - ஒக்டோபர் 1986)  

டாக்டர். மாலனி த சில்வா
(நவம்பர் 1986 - ஒக்டோபர் 1994)

டாக்டர். கே.பி. விக்கிரமசூரிய
(நவம்பர் 1994 - ஏப்ரல் 1998)


டாக்டர். (திருமதி) வினீதா கருணாரத்ன
(மார்ச் 1999 - ஜுலை 2008)

his7

டாக்டர். தீப்தி பெரேரா
(ஜனவரி 2009 - ஜுன் 2014)
xdirector 
 
டாக்டர்.ஹேமந்த பெனரகம
 ( ஜுன் 2014-வைகாசி 2016) 

மக்களுக்குத் திருப்திகரமான முறையில் சுகாதாரச் சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் பாரிய ஒரு பொறுப்பாகும். ஆகையால், நவீன சுகாதார எண்ணக் கருக்களுக்கு இணங்க சுகாதார விடயத்திற்கான சமயோசித திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்குமான சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, 1980 இன் சுகாதார சமவாயத்திற்கான ஒரு தரப்பாக மாறிய பின்னர், ஆரம்ப சுகாதார பராமரிப்பு அணுகுமுறையானது ஒரு மாபெரும் வலிமையை அடைந்தது. குடும்ப சுகாதார சேவைகள், இலங்கை அரசாங்கத்தினால் பின் பற்றப்படுகின்ற அடிப்படை சுகாதார பராமரிப்பு சேவையின் முக்கியமான ஒரு அங்கமாக அமைப்புப் பெறுகின்றன.

அரசாங்கம் சனத்தொகை பற்றிய கொள்கையை 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மீளாய்வு செய்தது. இந்த சனத்தொகை பற்றிய கொள்கை இனப்பெருக்க உற்பத்தித்திறன் மட்டத்தின் மீள்நிலையை அடைவதற்கான அவசியத்தை எடுத்துரைக்கின்றது. அதாவது, இது 2000 ஆம் ஆண்டளவில், ஆகக்குறைந்தது மீளினப்பெருக்க வயதில் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்ற சராசரி அளவைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. இது அடுத்த நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் நிலையான ஒரு சனத்தொகை அளவைப் பேணுவதற்குப் பயனாக அமையும்.

அதே நேரம் 1994 ஆம் ஆண்டில் சனத்தொகையும் அபிவிருத்தியும் பற்றிய சர்வதேச மாநாட்டில், குடும்ப சுகாதாரத்திற்கான வாழ்க்கை வட்ட அணுகுமுறை ஒன்றை விஸ்தரித்து மீளினப்பெருக்க சுகாதார எண்ணக்கரு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் குடும்ப சுகாதாரப் பணியகம், ஏனைய தேசிய நிகழ்ச்சித் திட்டங்களுடனான நெருங்கிய கூட்டொத்துழைப்புடன் மீளினப்பெருக்க சுகாதார நிகழ்ச்சித் திட்ட அமுலாக்கலுக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது.

மீளினப்பெருக்க சுகாதார எண்ணக்கருவின் அறிமுகத்தைக் கொண்டு, ஒரு சனத்தொகை மீளினப்பெருக்கக் கொள்கை வகுத்தமைக்கப்பட்டு, இந்தக் கொள்கை 1998 ஆம் ஆண்டு தேசிய அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கொள்கையானது, நீண்டகால நோக்கில் நிலையான சனத்தொகைப் பெருக்கத்தை அடைந்து பாதக சமூக சுகாதார விளைவுகளைக் கட்டுப்படுத்தி, குடியகல்வு மற்றும் நகரமயமாக்கல் பொருளாதார நன்மைகளை ஊக்குவித்து, முதியோருக்கான சமூக சுகாதாரப் பராமரிப்பு உதவிகளை வழங்கி, பாலியியல் சமத்துவத்தை அடையக்கூடிய தரமான மீளினப்பெருக்க சுகாதாரத் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதன் மூலம் மக்கள் அவர்களுக்கான உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதை இலக்காகக் கொண்டு அமைகின்றது. இந்தக் கொள்கைகளினதும் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகு சுகாதார மட்டங்களையும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் அடைவதற்கான ஆவலினதும் பின்னணியில், மகப்பேற்று சுகாதாரம், சிறுவர் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஏனைய மகளிர் சுகாதாரப் பிரச்சினைகள் என்பன கணிசமான அழுத்தங்களைப் பெற்றுள்ளன.