1970 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து, மகப்பேற்று சிறவர் சுகாதாரச் சேவைகளை வழங்கும் நடபடிக்கையானது முழுமொத்த சுகாதார விநியோக முறைமையில் பாரிய அழுத்தத்தை அடைந்து வந்துள்ளது. இந்த நடபடிக்கை, நாடு முழுதிலும் சிறந்த வினைத்திறன் வாய்ந்த குடும்பச் சுகாதார சேவையொன்றை வழங்குவதற்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை வலுவூட்டுவதற்கான மிகவும் ஒருமுகப்பட்டவொரு முயற்சிக்கு வழிவகுத்தது.

சுகாதாரம் என்பது பன்முகப்பட்ட விடயங்களில் ஒன்றாகும். இந்தக் குடும்பச் சுகாதார சேவைகள் மாகாண மற்றும் மத்திய சுகாதார அதிகார சபைகளினது ஒருங்கிணைப்பில் வழங்கப் பட்டு வருகின்றன.

தேசிய மட்டத்தில், இந்தக் குடும்பச் சுகாதாரப் பணியகமானது நாட்டினுள் மகப்பேற்று சிறுவர் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான சுகாதார அமைச்சின் மத்திய நிலையமாக விளங்குகின்றது.

மாகாண மட்டத்தில், சுகாதாரச் சேவைகள் மாகாணப் பணிப்பாளரே (சுசேமாப) திணைக்களத் தலைவர் ஆவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிராந்திய (மாவட்ட) திணைக்களத் தலைவர்களான சுகாதாரச் சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர்கள் (சுசேபிப) இந்த மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு உதவுகின்றனர். அதே போல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவர்கள் உள்ளிட்ட குழுவொன்று இந்த சுசேபி பணிப்பாளருக்கு உதவுகின்றனர். மருத்துவ அதிகாரி / மகப்பேற்று சிறுவர் சுகாதார (மசிசு), பிராந்தியத் தொற்றுநோய் கட்டுப்பாட்டாளர் (தொக), பகுதி மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் (பமேபொசுப), பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார தாதி அலுவலர் (பிமேபொசுதாஅ), சுகாதாரக் கல்வி அலுவலர் 1-3 (சுகஅ), பிராந்திய பற் சத்திர சிகிச்சையாளர் (பிபசசி), புள்ளிவிபரவியல் அளவை ஆய்வு உத்தியோகத்தர் (புஅஆஉ), நிகழ்ச்சித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் (நிதிஉ) ஆகியோர் இந்தத் தொழில்நுட்பக் குழுவில் அடங்குகின்றனர். MCH பராமரிப்பு மற்றும் சேவைகளைத் திட்டமிட்டுக் கண்காணித்தல் பணிக்கு MO (MCH) பொறுப்பாக விளங்கும்.

ஒரு பிராந்தியத்தினுள் (மாவட்டத்தினுள்), மருத்துவ நிறுவனங்களினதும் சுகாதாரப் பிரிவுகளினதும் வலையமைப்பினூடாக இந்தச் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. சுகாதார மருத்துவ அதிகாரியின் பகுதியே மிகச்சிறிய சுகாதாரப் பிரிவாகும். இந்த மிகச்சிறிய சுகாதாரப் பிரிவை சுகாதார மருத்துவ அதிகாரி (சுமஅ) நிருவகிக்கின்றார். ஒவ்வொரு மாவட்டமும் ஏழு தொடக்கம் இருபது (07-20) வரையான சுகாதாரப் பிரிவுகளை உள்ளடக்குகின்றன.

பொது சுகாதாரத் தாதிமார்கள் (பொசுதா), பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (பொசுப), மேற்பார்வை பொது சுகாதார மருத்துவிச்சிகள் (மேபொசும) மற்றும் பொது சுகாதார மருத்துவிச்சிகள் (பொசும) ஆகியோர் உள்ளிட்ட பொது சுகாதார ஆளணியொன்று இந்த சுகாதார மருத்துவ அதிகாரிக்கு (சுமஅ) உதவுகின்றனர்.

இந்தப் பொது சுகாதார மருத்துவிச்சிதான் (பொசும) நாட்டினுள் தாய்மார்களுக்கும் சிறுவர் களுக்கும் இல்ல ரீதியில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகின்ற “முன்னரங்கு சுகாதாரப்” பணியாளர் ஆவார். இந்த பொசு மருத்துவிச்சிக்கு ஏறக்குறைய 2000 முதல் 5000 வரையான சனத்தொகையைக் கொண்ட ஒரு பிரிவு நன்கு வகுக்கப்பட்டு குறித்தொகுக்கப்படுகின்றது. முறையான வீ்ட்டு விஜயத்தினூடாக, இவர் தனது பிரிவினுள் குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளை வழங்குவதுடன், கர்ப்பினித் தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், பிள்ளைகள் மற்றும் முன்பள்ளிக்கூடச் சிறுவர்கள் ஆகியோருக்கு சுகாதாரப் பரமரிப்புச் சேவைகளையும் வழங்குகின்றார். இவர் சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் பற்றிய கல்வியையும் ஆலோசனையையும் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தேவையான ஆலோசனையையையும் தனது சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றார். இவர், இவரின் பிரிவுனுள் கருத்தடை சாதனங்களையும் (மருந்துகளையும் விந்துத் தடுப்புறைகளையும்) வழங்குவதுடன் வழமையான பின்னூட்டல் கருத்தடைப் பாவனை முறைகளையும் முன்வைக்கின்றார். இவர் மேலும், மகளிர் நன்புரி க்ளினிக் பகுதியை நாடும் வகையில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை ஊக்குவித்து, அதன் பின்னர் தனது ஒவ்வொரு வாடிக்கையாளரும் தான் வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு கள ரீதியில் அவர்கள் பற்றிய பின்னூட்டலையும் மேற் கொள்கின்றார். இல்ல ரீதியான இவரது சுகாதாரப் பராமரிப்புகள் தவிர, இவர் மக்களை சுகாதாரப் பராமரிப்பு முறைமையுடன் தொடர்புபடுத்தி பகுதிக் க்ளினிக்குகளிலும் கலந்து கொள்கின்றார்.

இந்த முறைமை சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுடன், மக்களுக்கு பாதுகாப்பும் ஊக்குவிப்பும் வாய்ந்த மகப்பேற்று சிறுவர் சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் பயனுள்ளதாகவும் அமைந்தது. மேலும் இந்த முறைமை, ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஓர் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றது எனவும் பெருமளவில் பேசப்பட்டிருந்தது.