• மகப்பேற்று சிறுவர் சுகாதாரத்துடன் (மசிசு) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை ஆதரவுகளை வழங்குதல்

 • மகப்பேற்று சிறுவர் சுகாதாரம் சம்பந்தப்பட்ட கொள்கைகளை வகுத்தமைத்தல் / மீளாய்வு செய்தல் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் ஏனைய பொருத்தமான அமைச்சுகளுக்கும் வழிகாட்டல்களையும் தொழில்நுட்ப நிபுனத்துவத்தையும் வழங்குதல்

 • கொள்கைகள் அடிப்படையிலான திறமுறைகளை ஏற்படுத்துதல்

 • திறமுறைகள் அடிப்படையில் மசிசு நிகழ்ச்சித் திட்டத்தை வகுத்தமைத்தல் / திட்டமிடுதல்

 • சிறந்த செயன்முறைகளையும், முன்னோடி சோதனை நடவடிக்கையையும் கண்டறிந்து, மசிசு நிகழ்ச்சித் திட்டத்தில் ஒன்றிணைத்தல்

 • தேசிய நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற் படுத்துவது தொடர்பில் மேற்பார்வை முகாமையாளர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பணிப்புரைகளையும், ஒருங்கிணைப்பையும் உதவியையும் வழங்குதல்

 • உரிய கடமைப் பட்டியல்கள் அடங்கலாக தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ வழிகாட்டல்களையும் உடன்பாடுகளையும் / மாதிரிகளையும் முன்வைத்தல்

 • அக்கறையுடைய தரப்புகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்துநர்கள் ஆகியோருடனான வலையமைப்பை ஏற்படுத்தி பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்புதல்

 • குறித்த கல்வி மற்றும் பயிற்சி சாதனங்களையும் நிகழ்ச்சித் திட்டத்தையும் தயாரித்தல்

 • உரிய ஊழியர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்புதலும் முற்சேவை, உள்ளக சேவை மற்றும் பட்டப்பின்படிப்பு வசதிகளை வழங்குதலும்

 • உரிய சுகாதார ஊழியர்களின் உள்ளக சேவைப் பயிற்சியையும் அடிப்படைப் பாடவிதானத்தையும் தயாரித்து மீளாய்வு செய்வதற்கான தொழில்நுட்ப நிபுனத்துவத்தை வழங்குதல்

 • மசிசு நிகழ்ச்சித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் சேவைகள் வழங்கல் முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துதல்

 • இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் (இஅ) ஏனைய தேசிய சர்வதேச மூலங்களிலிருந்தும் நிதிகளைத் திரட்டுவதற்கான ஆதரவை வழங்குதல்

 • அவசர மற்றும் விஷேட நிலைமைகளில் மசிசு சேவைகளின் தொழிற்படுகையையும் மீள்தாபிப்பையும் உறுதிப்படுத்துதல்

 • அபிவிருத்திப் பங்காளர்களுடனும் மாகாண சுகாதார ஊழியர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி நன்கொடைத் தரப்புகள் நிதியிட்ட கருத்திட்டங்களைச் செயற்படுத்துதல்

 • மகப்பேற்று கருச் சிதைவு, குழந்தைகள் இறப்பு வீதம், மற்றும் பொதுவான சனத்தொகை இறப்பு வீதம் ஆகியன தொடர்பில் விஷேட கவனத்தைச் செலுத்தி பாதக மசிசு விளைவுகளிலிருந்து பாதுகாத்தல்

 • மசிசு சேவைகளை தேசிய மட்டத்தில் கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்

 • சுகாதார அமைச்சு, அபிவிருத்திப் பங்காளிகள், அமுலாக்கல் அதிகாரசபைகள் மற்றும் ஏனைய பொருத்தமான முகவர் நிலையங்கள் போன்ற தரப்புகளுக்கான பின்னூட்டலை வழங்குதல்

 • மீளினப்பெருக்கச் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட சத்திரசிகிச்சை ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் ஒருங்கிணைத்தலும்